பொதுவாக டிவி விளம்பரங்கள் ஒரு தொல்லை
நாம் யூடியூப்பில் (YouTube) நமக்குப் பிடித்தமான சேனல்களின் வீடியோக்களையோ அல்லது திரைப்படங்களையோ பார்க்கும்போது, நடுவில் விளம்பரங்கள் தோன்றும். அப்போது, அந்த விளம்பரத்தைத் தவிர்க்க 'Skip' பொத்தான் (Skip Button) எப்பொழுது வரும் என்றுதான் நாம் காத்திருப்போம். வந்தவுடனே அதை அழுத்திக் கடந்து செல்ல முனைவோம். ஆனால், சில நேரங்களில் அந்த விளம்பரம் மிகவும் கவனத்தை கவரும் வகையில் இருக்கும்போது, 'Skip' பட்டனை அழுத்தவே நாம் மறந்துவிடுகிறோம்! வேறு சில நேரங்களில், விளம்பரப் பொருளைப் பொருளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விளம்பரத்தின் மீதே கிளிக் செய்கிறோம். விளம்பரம் செய்யப்படும் பொருளின் ஏதோவொரு அம்சம் நம் கவனத்தை ஈர்க்கும் அந்த கணத்தில், நாம் அதைச் சொடுக்குகிறோம். நாம் சொடுக்கும் இந்த கண நேரம் விளம்பரதாரங்களுக்கு நம்மைப் பற்றிய முக்கியமான தகவல்களை சொல்கின்றன.
இன்றைய டிஜிட்டல் விளம்பர உலகில் செயற்கை நுண்ணறிவின் (AI) வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பாரம்பரிய வணிக விளம்பரங்களை விட (Traditional Commercials) AI மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் நுகர்வோரின் கவனத்தை அதிகளவில் ஈர்ப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1. AI உருவாக்கும் விளம்பரங்கள் என்றால் என்ன?
AI விளம்பரங்கள் என்பது சினிமாப் படப்பிடிப்பு குழுக்கள், நடிகர்கள், பெரிய அரங்கங்கள் (Sets) எதுவுமின்றி முற்றிலும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் (Generative AI) உருவாக்கப்படும் விளம்பர உள்ளடக்கங்களாகும். ஸ்கிரிப்ட் எழுதுவது, குரல் பதிவு (Voiceover), பின்னணி இசை, படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் என அனைத்தும் சில நிமிடங்களில் கணினி அல்காரிதம்கள் மூலம் பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றன.
2. AI விளம்பரம் பார்க்க எப்படி இருக்கும்?
AI உருவாக்கும் விளம்பரங்கள் உயர் வரையறை (High-Definition) காட்சிகளையும், இயல்பான அசைவுகளையும் கொண்டு பார்ப்பதற்கு மிகவும் புதுமையாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும்.
இதோ ஒரு AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ விளம்பரத்திற்கான மாதிரி:
3. AI விளம்பரங்கள் ஏன் சிறந்து விளங்குகின்றன? (மின்ட் இதழின் தகவல்கள்)
சமீபத்தில் 'மின்ட்' (Mint) இதழில் வெளியான கட்டுரையின் படி, பாரம்பரிய விளம்பரங்களை விட AI விளம்பரங்கள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன:
குறிப்பு - 'Connected TV' என்றால் என்ன?
இணைய இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் டிவிகள் (Smart TVs) மற்றும் ஃபயர் டிவி ஸ்டிக் (Fire TV Stick), ஆப்பிள் டிவி போன்ற சாதனங்கள் மூலம் இணையம் வழியாக வீடியோக்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளே 'Connected TV' (இணையத்துடன் இணைக்கப்பட்ட டிவி) என்று அழைக்கப்படுகின்றன.
- அதிகமான வீடியோ நிறைவு விகிதம் (Higher Completion Rates): ஒரு விளம்பரத்தை எத்தனை பார்வையாளர்கள் கடைசி வரை பார்க்கிறார்கள் என்ற அளவு இது. அதீத செலவு செய்து விளம்பரப் படம் எடுத்து அதை 10% பேர் கூட முழுதாகப் பார்க்கவில்லை என்றால் காசு விரயம், வேதனை, வெட்கம். இணையத்துடன் இணைக்கப்பட்ட டிவி-களில் (Connected TVs) AI வீடியோ விளம்பரங்கள் 92% நிறைவு விகிதத்தைப் பெற்றுள்ளன. இது பாரம்பரிய விளம்பரங்களின் 90%-ஐ விட அதிகம். ஆன்லைன் வீடியோக்களிலும் AI விளம்பரங்கள் 71% பார்வைகளைப் பூர்த்தி செய்து முன்னிலையில் உள்ளன
. - தரவு அடிப்படையிலான இலக்குகள் (Data driven targeting): பார்வையாளர்களின் விருப்பங்களை நிகழ்நேரத்தில் (Real-time) பகுப்பாய்வு செய்தல இன்றைய காலத்தில் இயலும்.
உதாரணமாக ஒரு நகை விளம்பரம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் பலவகை நகைகளைக் காட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு சில நகைகள் காட்சியில் வரும் போது மக்கள் விளம்பரத்தின் மேல் சொடுக்கினால், அந்த நகை மக்களுக்கு மிகப் பிடித்துவிட்டது என்று (ஒரு உதாரணத்துக்கு) கொள்ளலாம்.
இந்த அறிவு ஒரு விளம்பரதாரருக்கு அவரது விளம்பரத்தை மேலும் கூர்மைப் படுத்த உதவும். பெரும்பாலான பார்வையாளர்கள் எந்த விளம்பரத்தின் காட்சிகள் மற்றும் வசனங்களை விரும்புகிறார்களோ அவற்றை விளம்பரத்தில் உசிதமாக அள்ளித் தெளித்து மாற்றி அமைப்பதால் விளம்பரம் அதிக மக்களைப் போய் சேரும். செலவுக்கேற்ற பலன் கிடைக்கும்.
விருப்பம் சார்ந்த வணிகம் என்றால் என்ன? (Intent-Driven Commerce)
பாரம்பரிய வணிகம் என்பது "தேடுதல் மற்றும் கிளிக் செய்தல்" (Search-and-Click) முறையை நம்பியுள்ளது. அதாவது, வாடிக்கையாளர் ஒரு பொருளைத் தேடி, லிங்குகளைக் (link) கிளிக் செய்து, விவரங்களை படித்துப் பார்த்துப் வாங்குவார்.
ஆனால், 'விருப்பம் சார்ந்த வணிகம்' (Intent-Driven Commerce) முறையில் AI தொழில்நுட்பமானது ஒரு பயனரின் தற்போதைய ஆன்லைன் நடத்தையை வைத்து, அவர் என்ன வாங்க விரும்புகிறார் என்ற உடனடி விருப்பத்தை (Immediate Intent) மிகத் துல்லியமாகக் கணித்துவிடும். வாடிக்கையாளர் தேடும் வரை காத்திருக்காமல், அவருக்குப் பிடிக்கும் வகையிலான தேர்வுகளை AI-யே உருவாக்கி, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் நேரடியாக அவர் முன் கொண்டு வந்து நிறுத்தும்.
4. விளம்பரதாரர்கள் AI விளம்பரங்களை ஏன் விரும்புகிறார்கள்?
மிகக் குறைந்த உற்பத்திச் செலவு (Lower Production Cost): பெரிய படப்பிடிப்புக் குழு, நடிகர்களின் சம்பளம், விலையுயர்ந்த கேமராக்கள் மற்றும் எடிட்டிங் தேவையில்லை என்பதால் செலவு பெருமளவு குறைகிறது.
- உள்ளூர் மொழிகளில் எளிதாக மாற்றுதல் (Vernacular Localization): (உதாரணமாக ஒரு தமிழ் விளம்பரத்தை தெலுங்குப் படுத்துதல்) ஒரு விளம்பரத்தை நாட்டின் பல பிராந்திய மொழிகளிலும், வட்டார வழக்குகளிலும் சில நொடிகளில் குரல் மாற்றம் மற்றும் உரைகளுடன் உருவாக்க முடியும்.
- வேகமான A/B சோதனைகள்: எந்த விளம்பரம் நன்றாக வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விளம்பர மாதிரிகளை உருவாக்கிச் சோதிக்கலாம்.
5. AI விளம்பர உருவாக்கத்தில் உள்ள சவால்கள்
- ஒரே மாதிரியான காட்சிகளை மீண்டும் உருவாக்குவதில் சிக்கல்: AI-யிடம் ஒரு காட்சியில் சிறிய மாற்றம் செய்யக் கேட்டால், அது பழைய காட்சியைச் சிறிதளவு மாற்றுவதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தக் காட்சியையுமே புதிதாக மாற்றிவிடும்.
- இயற்கையற்ற மனித அசைவுகள்: மனிதர்களின் கை அசைவுகள், நடப்பது போன்ற நுட்பமான உடல் அசைவுகள் சில நேரங்களில் செயற்கையாக (Unnatural/Uncanny) தெரியலாம்.
- உதடு அசைவுப் பொருத்தம் (Lip Sync Challenges): பேசும் குரலுக்கும், காட்சியில் உள்ள நபரின் உதடு அசைவுகளுக்கும் இடையே சரியான ஒத்திசைவைக் கொண்டுவருவதில் இன்னும் சில சவால்கள் உள்ளன.
6. சுருக்கம்
AI வருகையால் விளம்பரத் துறை என்பது இனி ஒரு சில பெரிய ஏஜென்சிகளின் கைகளில் மட்டும் இருக்கப்போவதில்லை. திறமையும் படைப்பாற்றலும் கொண்ட தனிநபர்கள் மற்றும் சிறு குழுக்கள் கூட மிகக் குறைந்த செலவில் தொழில்முறை விளம்பரங்களை உருவாக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக, விரைவு வணிக நிறுவனங்கள் (Quick Commerce) மற்றும் புதுமையின் அடிப்படையில் இயங்கும் ஸ்டார்ட்அப்கள் (Startups) சந்தையின் புதிய போக்குகளுக்கு ஏற்ப உடனுக்குடன் புதிய விளம்பரங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அவர்களுக்கு AI-ஆல் உருவாக்கப்படும் விளம்பரங்கள் ஒரு குறைந்த செலவிலான, அதிவேகத் தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
AI வீடியோ விளம்பரம் உருவாக்க ஒரு வழிகாட்டி (Tutorial Video)
நீங்களே சொந்தமாக AI வீடியோ விளம்பரங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் படிப்பிடியாகக் கற்றுக்கொள்ள கீழே உள்ள வீடியோ பயிற்சிப் பதிவைப் பார்க்கவும் (ஆங்கிலத்தில் விளக்கம் உள்ள ஒளிப்படம்):
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக