ரேசர்பே (Razorpay) அல்லது பேடிஈஎம் (Paytm) போன்று கேஷ்ஃப்ரீ பேமெண்ட்ஸ் (Cashfree Payments) என்பதும் இந்தியாவில் இயங்கும் ஒரு முன்னணி கட்டண நுழைவாயில் (Payment Gateway) நிறுவனமாகும். e-Commerce வணிகர்கள் மற்றும் நேரடியாக நுகர்வோருக்கு வணிகம் செய்யும் (D2C) விற்பனையாளர்கள் ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பாதுகாப்பாக வசூலிக்க இந்தத் தளம் உதவுகிறது.
தற்போது கேஷ்ஃப்ரீ, தனது வாடிக்கையாளர்களான இ-காமர்ஸ் வணிகர்களுக்கு ரிலே - 'Relay' எனும் AI சூப்பர்-ஏஜென்ட்டை (AI Super-Agent) ஒரு புதிய சேவையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையைப் பயன்படுத்த வணிகர்களுக்கு எந்தவிதமான கோடிங் (Coding) அல்லது AI தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. எளிய குரல் கட்டளைகள் (Voice Prompts) அல்லது எளிய உரை (Plain Text Language) மூலமே தங்களுக்குத் தேவையான AI ஏஜென்ட்களை நிமிடங்களில் உருவாக்கி, இயக்க முடியும்.
இந்தியாவில் 70% சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் (SMBs - Small and Medium Business) இன்னமும் பேமெண்ட் தொடர்பான பணிகளைக் கைமுறையாகவே (Manually) கையாண்டு வருகின்றனர். உதாரணத்திற்கு இவற்றில்
- பணம் செலுத்தாமல் கைவிடப்பட்ட (தொங்கலில் விடப்பட்ட) ஷாப்பிங் கார்ட்டுகள்
- பணம் செலுத்தும் போது இயக்கம் சிலபல காரணங்களால் முறிந்து போய் நடுவில் தொங்கும் பரிவர்த்தனைகள்
- மாத சந்தா கட்டும் வாடிக்கையாளர்கள் அப்படி செலுத்த தவறும் போது உடனடியாக கண்டுபிடித்தல்
இதற்காக வாரத்திற்குச் சராசரியாக 60 மணி நேரத்தைச் செலவிடும் வணிகர்களுக்குத் தீர்வாக ‘ரிலே’ எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கீழே காணலாம்.
1. வருவாய் மற்றும் லாபத்தை அதிகரிக்க உதவுவது எவ்வாறு?
வணிகங்களின் கைவிட்டுப்போகும் வருவாயை மீட்டுத் தருவதன் மூலம் ‘ரிலே’ நேரடியாக லாபத்தை உயர்த்துகிறது:
Abandoned Cart Recovery & Payment Recovery: கைவிடப்பட்ட ஷாப்பிங் கார்ட்டுகள் மற்றும் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளைத் தொடர் தொடர்புகள் (Follow-ups) மூலம் தானாகவே பின்தொடர்ந்து, வாடிக்கையாளர்களை மீண்டும் பணம் செலுத்தத் தூண்டி வருவாய் வாய்ப்பை மீட்கிறது.
COD Confirmation (RTO - Return to Origin தடுப்பு): "பொருளைப் பெற்றுக் கொள்ளும் போது பணம் செலுத்துதல்" (COD - Cash-on-Delivery) முறையில் செய்யப்படும் ஆர்டர்களை வாடிக்கையாளருக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பே, வாட்ஸ்அப் அல்லது செய்திகள் மூலம் உறுதிப்படுத்துகிறது. இது தவறான ஆர்டர்களைத் தடுத்து, சரக்கு திரும்பப் பெறப்படும் (RTO) செலவுகளைக் குறைத்து லாபத்தைப் பாதுகாக்கிறது.
Subscription Dunning & Dispute Management: சந்தா கட்டணங்கள் (Subscriptions) தவறும்போது அவற்றை மீளப்பெறுவதுடன், பேமெண்ட் தகராறுகளை (Disputes / Chargebacks) உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்து இழப்புகளைத் தடுக்கிறது.
2. ஆர்டர் நிர்வாக நேரத்தைச் சேமித்து வணிகத்தில் கவனம் செலுத்த உதவுவது எப்படி?
வாரத்திற்கு 60 மணி நேரத்திலிருந்து 45 நிமிடங்களாகக் குறைப்பு: பேமெண்ட் ஃபாலோ-அப்கள், தரவு சரிபார்ப்பு போன்ற கைமுறை பணிகளை AI ஏஜென்ட்களே ஆதி முதல் அந்தம் வரை (End-to-End) செய்துமுடிக்கின்றன.
எளிய குரல் மற்றும் உரை கட்டளைகள் (Voice / Text Prompts): வணிகர்கள் கோடிங் (coding) தேவை இன்றி, வெறும் பேச்சு அல்லது உரை கட்டளைகள் மூலம் தங்களுக்குத் தேவையான AI ஏஜென்ட்களை உடனடியாக உருவாக்கலாம்.
தடையற்ற ஒருங்கிணைப்பு: கூகுள் ஷீட்ஸ் (Google Sheets), ஸ்லாக் (Slack), வாட்ஸ்அப் மற்றும் ஜிமெயில் போன்ற ஆப்களுடன் நேரடியாக இணைந்து தானியங்கு அறிக்கைகளையும் பணிப்பாய்வுகளையும் (Workflows) உருவாக்குகிறது.
Relay எந்த வகையான AI? - Generative AI vs Machine Learning
‘ரிலே’ தளம் Generative AI மற்றும் Classical Machine Learning ஆகிய இரண்டின் சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பாகும் (Agentic AI Stack).
Generative AI (LLMs & Voice AI): வணிகர்கள் கொடுக்கும் குரல் மற்றும் உரை கட்டளைகளைப் புரிந்து கொண்டு (Natural Language Understanding) பணிப்பாய்வுகளை (workflow) உருவாக்கவும், வாடிக்கையாளர்களிடம் சூழலுக்கு ஏற்ப உரையாடவும் (Conversational AI - e.g., Bolna, Sarvam போன்றவை) GenAI பயன்படுகிறது.
Machine Learning & Predictive Rules: கேஷ்ஃப்ரீ-ன் சொந்த நிதித் தரவுகளின் (Transaction Data) அடிப்படையில் வாடிக்கையாளரின் வாங்கும் பழக்கம், ஆபத்து காரணிகள் (Risk Scoring) மற்றும் பரிவர்த்தனை தோல்விகளைக் கணித்து, எப்போது ஃபாலோ-அப் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க classical ML மாடல்கள் செயல்படுகின்றன.
பாதுகாப்பு & ஒப்புதல் (Human-in-the-Loop): ‘ரிலே’-ல் பணம் வெளிக்கொடுக்கும் முன்போ அல்லது வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்வதற்கு முன்போ வணிகரின் ஒப்புதல் பெறப்படுகிறது. மேலும் வணிகர்களின் நிதித் தரவுகள் கேஷ்ஃப்ரீ-ன் பாதுகாக்கப்பட்ட கட்டமைப்பிற்குள்ளேயே செயல்படுவதால், தரவுகள் வெளியாட்களுக்குப் பகிரப்படுவதில்லை. ஆனால் வணிகர்களின் தரவுகள் கேஷ்ஃப்ரீ நிறுவனத்திற்குக் கிடைக்கின்றன.
3. 'ரிலே'-க்கான பிற பயன்பாடுகள்
கேஷ்ஃப்ரீ நிறுவனம் ‘ரிலே’ தளத்தை வெறும் வாடிக்கையாளர் பேமெண்ட் வசூலுக்கு மட்டுமல்லாமல், வணிகத்தின் பல்வேறு நிதிச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்துகிறது:
விற்பனையாளர் கட்டணங்கள் (Vendor Payouts): மாத இறுதி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வணிகரின் விற்பனையாளர்களுக்கான (Vendors) பணப்பட்டுவாடாவைத் தானாகவே செயல்படுத்துதல்.
உயர் மதிப்புப் பரிவர்த்தனை எச்சரிக்கைகள் (High-value Alerts): பெரிய அளவிலான தொகைப் பரிவர்த்தனைகள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுதல் (Refunds) நடக்கும்போது, மனித ஒப்புதலுக்கு (Human Approvals) அனுப்பும் பாதுகாப்பு அமைப்புகளை இயக்குதல்.
மாடல் கான்டெக்ஸ்ட் புரோட்டோகால் ('ரிலே' MCP Server): Claude Desktop அல்லது ChatGPT போன்ற முன்னணி AI ஏஜென்ட்களுடன் MCP Server மூலம் நேரடியாக இணைத்து, பேக்-எண்ட் பணிப்பாய்வுகளை எளிய உரையாடல் மூலமே நிர்வகித்தல்.
சுருக்கம்
இந்தியாவில் ஏஐ பயன்பாடு அதிகரிப்பதை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. ஃபின்டெக் நிறுவனங்கள் 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பதை உணர்ந்து தங்கள் 'ரிலே' போன்ற கண்டுபிடிப்புகளை சிறுகுறு வணிகப் பயன்பாட்டிற்கு ஏதுவாக உருவமைத்துள்ளனர். கட்டண நுழைவாயில் (payment gateway) சேவை அளிப்போர் வசூலிக்கும் கட்டணத்தில் ஒரு ஆகக் குறைந்த விழுக்காட்டை தங்கள் சேவைக் கட்டணமாக பெறுகிறார்கள். அதில் நவீன தொழில்நுட்பத்தை பொருத்தி 'சேவை மதிப்புக் கூட்டலை' (upsell) முயற்சிக்கும் உத்தி எனக்கு C K பிரகலாத்-ன் 'Fortune At The Bottom Of The Pyramid' என்ற புத்தகத்தை நினைவூட்டுகிறது.
Reference:
- Business Stardard Article titled 'Cashfree rolls out AI Agents to automate payment ops" - dated 30, August 2026 by Ajinkya Kawale
- Cashfree Relay MCP Server Documentation

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக